ஐந்திணை எழுபது
ஆசிரியர் – மூவாதியார்

Translated by Vaidehi Herbert

Copyright © All Rights Reserved

குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், பாலை ஆகிய திணைகள் ஒவ்வொன்றிலும் 14 பாடல்களைக் கொண்டது இந்நூல்.  இந்நூலை இயற்றிய மூவாதியார் சமண சமயத்தைச் சார்ந்தவர்.

 

குறிஞ்சி – Kurinji

மலையும் மலை சார்ந்த இடமும் – Mountain and Mountain Environment
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் – Union of Lovers

1
தோழி தலைவனிடம் சொன்னது

அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்,
கவரி கடமா கதூஉம் படர் சாரல்
கானக நாட, மறவல், வயங்கு இழைக்கு
யானிடை நின்ற புணை.

What the heroine’s friend said to the hero

Oh lord of land with forests
and vast mountain slopes,
where deer eat avarai beans
in the millet fields along with
fresh clusters of grain!

Do not forget!  I was the
messenger between you and the
young woman with gleaming
jewels!

Notes:  தோழி தலைவனை வரைவு கடாயது.

அவரை பொருந்திய – with avarai vines, பைங்குரல் – fresh clusters, ஏனல் – millet field, கவரி கடமா – kavari deer (கடமா could also mean bison), கதூஉம் – bites off (கதூஉம் – இன்னிசை அளபெடை), படர் சாரல் கானக நாட – oh man from the forests on the spread mountain slopes, மறவல் – do not forget, வயங்கு இழைக்கு – for the young woman with bright jewels, யான் இடை நின்ற புணை – I was the support, I was the messenger

2
தலைவி தோழியிடம் சொன்னது

கொல்லைப் புனத்த அகில் சுமந்து, கல் பாய்ந்து,
வானின் அருவி ததும்பக் கவினிய
நாடன், நயமுடையன் என்பதனால், நீப்பினும்
வாடல் மறந்தன தோள்.

What the heroine said to her friend

Since he is a fine man,
my arms have forgotten
to become slim,
even though he has left,

my lover from the beautiful
country where overflowing,
white waterfalls come down
the mountains carrying akil
wood from the forests.

Notes:  வரைவு தலைவந்தமை கண்டு மகிழ்ந்த தலைமகள் தோழிக்குக் கூறியது.

கொல்லைப் புனத்த அகில் சுமந்து – carrying akil wood from the forest, eaglewood trees, கல் பாய்ந்து – falling from the mountains, வானின் அருவி ததும்ப – white waterfalls overflow, கவினிய நாடன் – the man from the beautiful country, நயமுடையன் என்பதனால் – since he is a fine man,  நீப்பினும் – even though he has left, வாடல் மறந்தன தோள் –  my arms have forgotten to become thin

3
தோழி தலைவியிடம் சொன்னது

இலை அடர் தண் குளவி ஏய்ந்த பொதும்பில்,
குலை உடைக் காந்தள் இன வண்டு இமிரும்,
வரையக நாடனும் வந்தான், மற்று அன்னை
அலையும் அலை போயிற்று இன்று.

What the heroine’s friend said to her

Mother’s anguish has ended
today, since the lord of the
mountains,

……….where swarms of bees
……….buzz on clusters of kānthal
……….flowers in groves with cool
……….kulavi trees dense with leaves,

came for your hand.

Notes:  தோழி தலைவன் வரைவு வலிந்தமை தலைவிக்குச் சொல்லியது.

இலை அடர் தண் குளவி – cool kulavi dense with leaves, millingtonia hortensis, ஏய்ந்த பொதும்பில் – in the groves, குலை உடைக் காந்தள் – glory lilies in clusters, இன வண்டு இமிரும் – swarms of bees hum, வரையக நாடனும் வந்தான் – the man from the mountains came (for your hand), மற்று அன்னை அலையும் அலை போயிற்று இன்று – and mother’s/foster mother’s sorrow has gone away today (மற்று – அசைநிலை)

4
தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்கும்படி

மன்றப் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு வந்து, மந்தி முலை வருடக், கன்று அமர்ந்து
ஆமா சுரக்கும், அணி மலை நாடனை
யாமாப் பிரிவது இலம்.

What the heroine said to her friend, as the hero listened nearby

I will not part from the lord
of the lovely mountains,
where a female monkey eats
segments of ripe, sweet
jackfruits from a tree in the
common ground,
and strokes the breasts of a
wild cow which secretes milk,
like it would for its calf.

Notes:   தலைவனைப் பழித்த தோழியிடம் தலைவி சொன்னது.  நற்றிணை 57 – தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத் துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம்பால் கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும் மாமலை நாட! மருட்கை உடைத்தே, செங்கோல் கொடுங்குரல் சிறு தினை வியன் புனம் கொய் பதம் குறுகும் காலை, எம் மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே.

மன்றப் பலவின் சுளை விளை தீம் பழம் உண்டு – eating the mature sweet jackfruit segments in the tree in the common grounds, வந்து மந்தி முலை வருட – a female monkey comes and rubs, கன்று அமர்ந்து ஆமா சுரக்கும் – a wild cow secretes milk like it would do for its calf, அணி மலை நாடனை – the man from the beautiful mountains, யாமாப் பிரிவது இலம் – I will not separate from him

5
தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக

சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
வலியாகிப் பின்னும் பயக்கும், மெலிவில்
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை,
நயம் திகழும் என்னும் என் நெஞ்சு.

What the heroine said to her friend as the hero listened nearby

My heart thinks my friendship
with the man from the mountains
with splendid groves with huge
ponds will benefit me,

like the friendships with the wise
which are not ruining, but rooted
and strong, yielding benefits.

Notes:  தலைவனைப் பழித்த தோழியிடம் தலைவி சொன்னது.

சான்றவர் கேண்மை – the friendships of the wise, சிதைவு இன்றாய் – without getting ruining, ஊன்றி வலியாகி – they will be planted and firm, பின்னும் பயக்கும் – they will give benefits even later, மெலிவு இல் கயம் – ponds that are not small, ponds that are not dry, திகழ் சோலை மலை நாடன் கேண்மை – the friendship of the man from the mountains with flourishing groves, நயம் திகழும் என்னும் என் நெஞ்சு – my heart thinks it is good

6
தோழி தலைவனிடம் சொன்னது

பொன் இணர் வேங்கை கமழும் நளி சோலை
நன் மலை நாட, மறவல், வயங்கு இழைக்கு
நின் அலது இல்லையால், ஈயாயோ கண்ணோட்டத்து
இன் உயிர் தாங்கும் மருந்து?

What the heroine’s friend said to the hero

Oh lord of the lovely mountains
with dense groves with fragrances
of golden clusters of vēngai flowers!

Do not forget her!  She has nobody
but you, my friend wearing lustrous
jewels.

Won’t you please shower on her your
graces, the medicine to sustain her
sweet life?

Notes:  புணர்ந்து நீங்கும் தலைவனைக் கண்டு தோழி வரைவு கடாயது.

பொன் இணர் வேங்கை – clusters of golden kino flowers, Pterocarpus marsupium, கமழும் – are fragrant, நளி சோலை – dense groves, நன் மலை நாட – oh man from the fine mountain country, மறவல் – do not forget, வயங்கு இழைக்கு – to the young woman with lustrous jewels, நின் அலது இல்லையால் – she does not have anybody but you, ஈயாயோ கண்ணோட்டத்து – won’t you be gracious to her (ஓ – இசை நிறை, வினாவுமாம்), இன் உயிர் – sweet life, தாங்கும் மருந்து – it is the medicine that will save her

7
தோழி செவிலியிடம் சொன்னது

காய்ந்தீயல், அன்னை, இவளோ தவறிலள்,
ஓங்கிய செந்நீர் இழிதரும் கான்யாற்றுள்
தேன் கலந்து வந்த அருவி முடைந்து ஆடத்
தாம் சிவப்பு உற்றன கண்.

What the heroine’s friend said to the foster mother

Don’t be angry, mother!
She did not commit any
mistake!

Our eyes are red because
we played until we were
tired in the tall waterfalls,
flowing down from red
forest streams mixed with
honey.

காய்ந்தீயல் அன்னை – do not be enraged O mother, இவளோ தவறிலள் – she did not commit any mistake, ஓங்கிய – high, செந்நீர் – red water, இழிதரும் கான்யாற்றுள் – flowing forest streams, தேன் கலந்து வந்த அருவி – waterfalls that came down mixed with honey, முடைந்து – became tired, ஆடத் தாம் – because we were playing, சிவப்பு உற்றன கண் – eyes obtained the red color

8
தோழி தலைவனிடம் சொன்னது

வெறி கமழ் தண் சுனைத் தண்ணீர் துளும்பக்,
கறி வளர் தேமா நறும் கனி வீழும்,
வெறி கமழ் தண் சோலை நாட, ஒன்று உண்டோ
அறிவின் கண் நின்ற மடம்?

What the heroine’s friend said to the hero

Oh lord of the fragrant, cool groves,
where fragrant, sweet mangoes,
from trees on which pepper vines
grow, drop into cool ponds making
the water splash!

Could you be considered as ignorant?

Notes:  புணர்ந்து நீங்கும் தலைவனைக் கண்டு தோழி வரைவு கடாயது.

வெறி கமழ் – with intense fragrance, தண் சுனைத் தண்ணீர் துளும்ப – causing water in ponds/springs to splash, கறிவளர் – pepper-growing, தேமா நறும் கனி வீழும் – fragrant sweet ripe mangoes fall, வெறி கமழ் தண் சோலை நாட – oh man from the country with very fragrant cool groves, ஒன்று உண்டோ அறிவின் கண் நின்ற மடம் – could you be thought of as being ignorant

9
தலைவி தோழியிடம் சொன்னது

மன்றத் துறுகல் கருங்கண் முசு உகளும்
குன்றக நாடன், தெளித்த தெளிவினை,
நன்றென்று தேறித் தெளிந்தேன், தலையளி
ஒன்று மற்று ஒன்றும் அனைத்து.

What the heroine said to her friend

When the lord of the mountains,

……….where a black-eyed monkey
……….leaps around on the boulders
……….in the common ground,

explained clearly, I understood well
that his graces for me is what will
protect me.

Notes:  தலைவனைப் பழித்த தோழியிடம் தலைவி சொன்னது.

மன்றத் துறுகல் – on the boulders in the common grounds, கருங்கண் முசு உகளும் – a monkey with black eyes leaps around, langur monkey, குன்றக நாடன் – the man from the mountains, தெளித்த தெளிவினை – what he explained clearly, நன்றென்று தேறித் தெளிந்தேன் – I understood clearly that it is good, தலையளி – graces, ஒன்று மற்று ஒன்றும் அனைத்து – that it is one that will protect me (மற்று – அசைநிலை)

10
தோழி தலைவனிடம் சொன்னது

பிரைசங் கொள வீழ்ந்த தீந் தேன் இறாஅல்,
மரையான் குழவி குளம்பில் துகைக்கும்,
வரையக நாட, வரையால் வரின், எம்
நிரை தொடி வாழ்தல் இவள்.

What the heroine’s friend said to the hero

Oh man from the mountains
where an elk calf stomps on a
fallen sweet honey comb with
honey!

If you do not come and marry
her, my friend wearing rows
of bangles will not live.

Notes:  வரைவு கடாயது.

பிரைசங் கொள வீழ்ந்த தீந் தேன் இறாஅல் – sweet honeycomb that fell with honey (பிரைசம் – பிரசம், தேன், அகர ஐகார இடைப்போலி,  இறாஅல் – இசைநிறை அளபெடை), மரையான் குழவி – a calf of an elk, a calf of a bison, குளம்பில் துகைக்கும் – crushes with its feet, வரையக நாட – oh man from the mountainous country, வரையால் வரின் – if you do not come to marry her, எம் நிரைதொடி வாழ்தல் இவள் – my friend wearing rows of bangles will not live (நிரைதொடி – வினைத்தொகையன்மொழி)

11
தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்கும்படி

கேழல் உழுத கரி புனக் கொல்லையுள்,
வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும்,
தாழ் அருவி நாடன், தெளி கொடுத்தான், என் தோழி
நேர் வளை நெஞ்சு ஊன்று கோல்.

What the heroine’s friend said to her, as the hero listened nearby

The man from the country
with waterfalls,

……….where a male monkey
……….is distressed not able to
……….find the ripe bananas that
……….it buried in a field rooted
……….by boars and burned
……….and cleared by farmers,

explained clearly, and it struck
my friend wearing perfect bangles,
like an arrow thrust into her heart.

Notes:  தலைவனை இயற்பழித்தது.

கேழல் உழுத – dug up by wild boar, கரி புனக் கொல்லையுள் – in the fields that were burned (and cleared), வாழை முது காய் – ripe bananas, கடுவன் புதைத்து அயரும் – a male monkey buries and then worries (not finding them), தாழ் அருவி நாடன் – the man from the country with waterfalls flowing down, தெளி கொடுத்தான் – he explained clearly, என் தோழி – my friend, நேர் வளை – the young woman with perfect bangles (வினைத்தொகை அன்மொழி), நெஞ்சு – heart, chest, ஊன்று கோல் – like a thrust arrow

12
தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்கும்படி

பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக்,
கருங்கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை மலை நாடன் கேண்மை,
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து.

What the heroine said to her friend, as the hero listened nearby

The friendship of the man
from the mountains,

……….where a huge elephant
……….with a large trunk
……….eats mountain rice and
……….sleeps on green leaves in
……….a grove with kadampam
……….trees swarmed by bees,

is protection to those close to him.

Notes:  தலைவனைப் பழித்த தோழியிடம் தலைவி சொன்னது.

பெருங்கை இருங்களிறு – big/dark elephant with a large trunk, ஐவனம் மாந்தி – ate mountain rice, கருங்கால் மராம் – black-trunked kadampam trees, Kadampa oak, பொழில் – grove, பாசடைத் துஞ்சும் – sleeps on green leaves, சுரும்பு இமிர் – bees swarming, சோலை – groves, மலை நாடன் –the  man from the mountains, கேண்மை பொருந்தினார்க்கு – to those who are close friends, ஏமாப்பு உடைத்து – it is protection

13
தலைவி தோழியிடம் சொன்னது

வார் குரல் ஏனல் வளைவாய்க் கிளை கவரும்
நீரால், தெளி திகழ் கா நாடன் கேண்மையே,
ஆர்வத்தின் ஆர முயங்கினேன், வேலனும்
ஈர வலித்தான் மறி.

What the heroine said to her friend

I embraced with great love,
the lord of the lovely land
with forests, when protecting
the long clusters of millet from
stealing parrots with curved
beaks.

My friendship with him has
caused the vēlan to consider
killing a young goat.

Notes:  வெறிவிலக்க வேண்டும் எனத் தலைவி தோழியிடம் அறத்தொடு நின்றாள்.

வார் குரல் ஏனல் – long millet clusters, வளைவாய்க் கிளை – parrots with curved beaks (கிளை – கிள்ளை, கிளி, இடைக்குறை விகாரம்), கவரும் நீரால் – seizing nature, தெளி திகழ் கா நாடன் – the man from the splendid land with forests, கேண்மையே – the friendship (ஏகாரம் – பிரிநிலை), ஆர்வத்தின் ஆர முயங்கினேன் – I embraced him with great love, வேலனும் – the Murukan priest (வேலனும் – உம்மை உயர்வு சிறப்புப் பொருளது), ஈர – cutting up, வலித்தான் – considering, மறி – a young goat

14
தலைவி தோழியிடம் சொன்னது

குறையொன்று உடையேன் மன், தோழி, நிறையில்லா
மன்னுயிர்க்கு ஏமம் செயல் வேண்டும், இன்னே
அரா வழங்கு, நீள் சோலை நாடனை, நம் இல்
இரா வாரல் என்பது உரை.

What the heroine said to her friend

I have a request, oh friend!
You need to protect my life
that is unstable.

Tell the lord of the land with
huge groves not to come to
our house at night when snakes
crawl around.

Notes:  தலைவன் வரும்வழியின் ஏதத்திற்கு கவன்ற தலைவி, வரைவு வேண்டித் தோழிக்கு உரைத்தது.

குறையொன்று உடையேன் – I have a complaint, I have a request, மன் – அசை நிலை, an expletive, தோழி – my friend, நிறையில்லா மன்னுயிர்க்கு – to my unstable life, ஏமம் செயல் வேண்டும் – you need to protect, இன்னே அரா வழங்கு – where snakes move around, நீள் சோலை நாடனை – the man from the country with huge groves, நம் இல் இரா வாரல் என்பது உரை – tell him not to come to our house at night (இரா – வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது)

முல்லை – Mullai

காடும் காடு சேர்ந்த இடமும் – Forest and forest environment
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் – Patient Waiting

15
தலைவி தோழியிடம் சொன்னது

செங்கதிர்ச் செல்வன் சினம் கரந்த போழ்தினால்,
பைங்கொடி முல்லை மணம் கமழ, வண்டு இமிரக்,
காரோடு அலமரும் கார்வானம் காண்தொறும்,
நீரோடு அலமரும் கண்.

What the heroine said to her friend

When the sun with red rays
hides its rage,
the mullai blossoms on green
vines spread fragrances, bees
buzz, and rainclouds move in
the sky.

Whenever I see these, my eyes
get distressed with tears.

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

செங்கதிர்ச் செல்வன் சினம் கரந்த போழ்தினால் – when the sun with red rays hides its rage, பைங்கொடி முல்லை மணம் கமழ – jasmine flowers from green vines spread their fragrance, வண்டு இமிர – bees buzzing, காரோடு அலமரும் கார்வானம் காண்தொறும் – whenever I see the sky with moving rain clouds, நீரோடு அலமரும் கண் – my eyes are distressed with tears

16
தலைவி தோழியிடம் சொன்னது

தட மென் பணைத்தோளி, நீத்தாரோ வாரார்,
மட நடை மஞ்ஞை அகவக், கடல் முகந்து
மின்னோடு வந்தது எழில் வானம், வந்து என்னை
என்னாதி என்பாரும் இல்.

What the heroine said to her friend

Oh friend with curved, delicate,
bamboo-like arms!

My lover who left has not come back.
The lovely clouds that took water
from the ocean have come down with
lightning for peacocks of delicate
walk to sing.

There is nobody to come and ask
me about my situation!

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

தட மென் பணைத்தோளி – oh one with curved/large delicate arms like bamboo (பணைத்தோளி – உவமைத்தொகை அன்மொழி, அண்மைவிளி), நீத்தாரோ வாரார் – one who left has not returned, மட நடை மஞ்ஞை அகவ – for peacocks of delicate walk to sing, கடல் முகந்து – absorbing from the ocean, மின்னோடு வந்தது – came with lightning, எழில் வானம் – beautiful clouds, வந்து என்னை என்னாதி என்பாரும் இல் – there is nobody to come and ask me about my situation (என்பாரும் – உம்மை இறந்தது தழுவியது)

17
தலைவி தோழியிடம் சொன்னது

தண் நறும் கோடல் துடுப்பெடுப்பக், கார் எதிரி
விண் உயர் வானத்து உரும் உரற்றத், திண்ணிதின்
புல்லுநர் இல்லார் நடுங்கச், சிறு மாலை
கொல்லுநர் போல வரும்.

What the heroine said to her friend

It comes like a murderer,
this early evening that
causes those who do not
embrace their lovers tightly
to tremble,
when thunder roars high in
the sky in this rainy season
and cool, fragrant kōdal
flowers with ladle-like petals
have blossomed.

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

தண் நறும் கோடல் – cool fragrant kōdal, white glorylilies, துடுப்பெடுப்ப – have put out flowers with ladle-like petals (துடுப்பு – உவமை ஆகுபெயர்), கார் எதிரி விண் உயர் வானத்து உரும் உரற்ற – thunder roars high in the sky in the rainy season, திண்ணிதின் புல்லுநர் இல்லார் நடுங்க – caused those who don’t embrace tightly to tremble, சிறு மாலை – early evening, கொல்லுநர் போல வரும் – comes like one who murders

18
தலைவி தோழியிடம் சொன்னது

கதழ் உறை வானம் சிதற, இதழ் அகத்துத்
தாது இணர்க் கொன்றை எரி வளர்ப்பப், பாஅய்
இடிப்பது போலும் எழில் வானம் நோக்கித்
துடிப்பது போலும் உயிர்.

What the heroine said to her friend

Speeding clouds drop rain,
clusters of flame-like blossoms
with pollen amidst their petals
have been put out by kondrai
trees, and roaring thunder
spreads in the sky like it is
attacking me.

Whenever I see these, my life
writhes in pain.

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

கதழ் உறை வானம் சிதற – speeding clouds drop rain, இதழ் அகத்துத் தாது – pollen amidst petals, இணர்க் கொன்றை எரி வளர்ப்ப – clusters of laburnum flowers are like flame, Indian laburnum, சரக் கொன்றை, golden shower tree, பாஅய் இடிப்பது போலும் – spreading thunder feels like it is attacking me (பாஅய் – இசைநிறை அளபெடை), எழில் வானம் – beautiful sky, நோக்கி – on seeing, துடிப்பது போலும் உயிர் – my life struggles (போலும் – முன்னது உவமவுருபு, பின்னது ஒப்பில் போலி.  உயிர் ஆகுபெயராய் உடலினையும் உணர்த்தும்)

19
தலைவி தோழியிடம் சொன்னது

ஆலி விருப்புற்று அகவிப் புறவெல்லாம்
பீலி பரப்பி மயில் ஆலச், சூலி
விரிகுவது போலும் இக் கார் அதிர, ஆவி
உருகுவது போலும் எனக்கு.

What the heroine said to her friend

Peacocks spread their plumes
and dance and sing joyously
in the forest, responding to rain.
Swollen clouds spread and roar
in this rainy season, and I feel my
life is melting away.

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

ஆலி விருப்புற்று அகவி – singing with desire as rain drops, புறவெல்லாம் பீலி பரப்பி மயில் ஆல – peacocks dance spreading their feathers all over the forest, சூலி விரிகுவது போலும் – like clouds are spreading from the core, like pregnant clouds spreading, இக் கார் – this rainy season, அதிர – clouds roar, ஆவி உருகுவது போலும் எனக்கு – I feel like my life is melting (போலும் – முன்னது பெயரெச்சம், பின்னது உவம உருபு)

20
தலைவி தோழியிடம் சொன்னது

இனத்த வருங்கலை பொங்கப், புனத்த
கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப, இடி மயங்கி
யானும் அவரும் வருந்தச், சிறு மாலை
தானும் புயலும் வரும்.

What the heroine said to her friend

This early evening comes with wind
and torments me and my lover,
as thunder roars, herds of stags roam
with their mates, and mullai flowers
on tangled vines have blossomed.

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

இனத்த வருங்கலை பொங்க – herds of male deer roam with their mates, புனத்த – in the forest, கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப – from tangled vines jasmine flowers have blossomed, இடி மயங்கி – when thunder roars, யானும் அவரும் வருந்த – causing him and me to feel sad, சிறு மாலை தானும் புயலும் வரும் – early evening comes with wind

21
தலைவி தோழியிடம் சொன்னது

காரிகை வாடத் துறந்தாரும் வாரா முன்,
கார் கொடி முல்லை எயிறு ஈனக், காரோடு
உடன் பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ, எம்மின்
மடம் பட்டு வாழ்கிற்பார் இல்.

What the heroine said to her friend

There is nobody living that is as
naïve as me.

Before my lover who abandoned
me giving anguish has returned,
monsoon rains have arrived
causing mullai vines to put out
buds resembling teeth.

Evenings with rainfall distress
me.

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.  பற்களைப் போன்ற அரும்பு:  குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என.

காரிகை வாடத் துறந்தாரும் – the man who abandoned the young woman (me) causing pain, வாரா முன் – before he has returned, கார் – monsoon rain, கொடி முல்லை எயிறு ஈன – jasmine vines have put out teeth-like buds, காரோடு உடன் பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ – evening what comes along with the rain and distresses me, எம்மின் மடம் பட்டு வாழ்கிற்பார் இல் – there is nobody else living that is naïve like me

22
தலைவி தோழியிடம் சொன்னது

கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னுரைத்துக்
கன்று அமர் ஆயம் புகுதர, இன்று
வழங்கிய வந்தன்று மாலையாம், காண
முழங்கி வில் கோலிற்று வான்.

What the heroine said to her friend

Today, evening has arrived,
and cows enter town with
love for their calves,
followed by cattle herders
who play tunes on kondrai
pods.

Clouds roar, and curved
rainbows have appeared in
the sky.

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.  ஆ மன்றத்தில் புகுதல் – அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 –  கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 – ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர.

கொன்றைக் குழலூதி – playing on kondrai pods as flutes, Indian laburnum, golden shower tree, Cassia Fistula, கோவலர் பின்னுரைத்து – cattle herders walking behind, கன்று அமர் ஆயம் புகுதர – cows with love for their calves enter the town, இன்று வழங்கிய வந்தன்று மாலையாம் – evening that arrived today, காண – to see, முழங்கி – roars, வில் – rainbow, கோலிற்று – have curved, have arched, வான் – clouds/sky

23
தலைவி தோழியிடம் சொன்னது

தேரைத் தழங்கு குரல், தார் மணி வாய் அதிர்ப்ப,
ஆர் கலி வானம் பெயல் தொடங்கிக் கார் கொள,
இன்று ஆற்ற வாரா விடுவார் கொல் காதலர்?
ஒன்றாலும் நில்லா வளை.

What the heroine said to her friend

Will my lover not come
to comfort me with the
bells of his horses sounding
like the loud croaking
of toads,
even as the uproarious sky
has started to rain and the
rainy season is here?

My bangles keep slipping
down even when I try to
hold them together.

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

தேரைத் தழங்கு குரல் – loud croaks of toads, தார் மணி வாய் அதிர்ப்ப – sounding like the bells on the strands (of horses), ஆர் கலி வானம் பெயல் தொடங்கிக் கார் கொள – the uproarious sky has started to rain and monsoon has started, இன்று ஆற்ற வாரா விடுவார் கொல் காதலர் – will my lover not come to reduce my pain, ஒன்றாலும் நில்லா வளை – my bangles keep slipping even when I try to hold them

24
தலைவி தோழியிடம் சொன்னது

கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை,
முல்லை தளவொடு போது அவிழ, எல்லி
அலைவு அற்று விட்டன்று, வானமும் உண்கண்
முலை வற்று விட்டன்று நீர்.

What the heroine said to her friend

Mullai and thalavam flowers
have blossomed beautifully
on the bushes in the forest
with rocks, and the sky rained
without stopping, all night long.

Tears from my kohl-decorated
eyes flow down my breasts.

கல் ஏர் புறவின் – in the forest with rocks, கவினி – beautifully, புதன் மிசை – on the bushes, முல்லை தளவொடு போது அவிழ – jasmine and thalavam (jasminum humile, or jasminum elangatum or jasminum polyanthum) have opened into flowers, எல்லி அலைவு அற்று விட்டன்று வானமும் – the sky rained without stopping all night long, உண்கண் – kohl-rimmed eyes, முலை வற்று விட்டன்று நீர் – tears flow down my breasts

25, 26
இரண்டு பாடல்கள் மறைந்தவை – These two poems have been lost

27
தலைவி தோழியிடம் சொன்னது

கார்ப்புடைப் பாண்டில் கமழப், புறவெல்லாம்
ஆர்ப்போடு இன வண்டு இமிர்ந்து ஆட, நீர்த்தன்றி
ஒன்றாது அலைக்கும் சிறு மாலை மாறுழந்து
நின்றாக நின்றது நீர்.

What the heroine said to her friend

Rain has fallen, vākai trees have
put out fragrances, and swarms
of bees hum loudly and fly around
with joy in the forests in this early
evening time that torments me with
enmity and without any kindness.

Tears have welled in my eyes.

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

கார்ப்புடைப் பாண்டில் கமழ – rains fell and vākai trees have put out fragrances, பாண்டில், வாகை மரம், sirissa, mimosa Flexuosa, புறவெல்லாம் – in all the forests, ஆர்ப்போடு இன வண்டு இமிர்ந்து ஆட – bees hum loudly in joy, நீர்த்தன்றி – without kindness, ஒன்றாது – with enmity, அலைக்கும் சிறு மாலை – early evening that torments, மாறுழந்து நின்றாக – it is here opposing me, நின்றது நீர் – tears have welled in my eyes

28
தலைவி தோழியிடம் சொன்னது

குருந்தலை வான் படலை சூடிச், சுரும்பு ஆர்ப்ப,
ஆயன் புகுதரும் போழ்தினான், ஆய் இழாய்,
பின்னொடு நின்று பெயரும் படு மழை கொல்,
என்னொடு பட்ட வகை?

What the heroine said to her friend

Oh friend wearing chosen
jewels!

This sorrow of mine, is it
because of the heavy rain
that has fallen constantly
at this time,
when a cattle herder,
donning a bright kuruntham
flower garland buzzed by
bees, enters town?

Notes:  பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

குருந்தலை – kuruntham flowers, வான் – white/bright, படலை சூடி – wearing flower garlands, சுரும்பு ஆர்ப்ப – bees buzzing, ஆயன் புகுதரும் போழ்தினான் – at the time when the cattle herder enters, ஆய் இழாய் – oh friend wearing chosen jewels, oh friend wearing beautiful jewels, பின்னொடு நின்று பெயரும் படு மழை கொல் – is it because of the heavy rains that move and fall constantly, என்னொடு பட்ட வகை – the sorrow of mine

 

பாலை – Pālai

வறண்ட பாலை நிலம் – Parched Wasteland

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் – Separation of Lovers

29
தோழி தலைவியிடம் சொன்னது

எழுத்துடைக் கல் நிரைக்க, வாயில் விழுத்தொடை
அம்மாறு அலைக்கும் சுர நிறைத்து, அம்மாப்
பெருந்தரு தாளாண்மைக்கு ஏற்க, அரும் பொருள்
ஆகும் அவர் காதல் அவா.

What the heroine’s friend said to her

His love and desire for
precious wealth, suiting
his great esteem and effort,
causes him to go to the
wasteland with rows of
memorial stones with
writings, and paths with
bandits with strong bows
who cause distress.

Notes:  தலைவனின் செலவைத் தலைவிக்குத் தோழி உணர்த்தியது.

எழுத்துடைக் கல் நிரைக்க – memorial stones with writings are in rows, வாயில் – paths, விழுத்தொடை – with their strong bows, அம்மாறு அலைக்கும் – cause distress on the path, சுர நிறைத்து – in the wasteland, அம்மாப் பெருந்தரு தாளாண்மைக்கு ஏற்க – according to great esteem and effort, அரும் பொருள் ஆகும் – it is for precious wealth, அவர் காதல் அவா – his love and desire

30
தலைவி தோழியிடம் சொன்னது

வில் உழுது உண்பார் கடுகி, அதர் அலைக்கும்
கல் சூழ் பதுக்கையார் அத்தத்தில் பாரார் கொல்,
மெல் இயல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்கு இவர்ந்து
நில்லாத உள்ளத்தவர்.

What the heroine said to her friend

The man lacking a tender
outlook, who left for wealth
without the heart to stay,
will he see in the wasteland,
the many shallow graves
surrounded by stones, caused
by bandits who live by their
bows and torment greatly those
who go on the paths?

Notes:  தலைவனின் செலவு உடன்படாத தலைவி தோழிக்குச் சொல்லியது.

வில் உழுது உண்பார் – those who live with their bows, கடுகி – abundantly/nearing, அதர் அலைக்கும் – cause distress on the paths, கல் சூழ் பதுக்கை – shallow graves surrounded by stones, ஆர் – filled, அத்தத்தில் பாரார் கொல் – will he see them in the wasteland, மெல் இயல் கண்ணோட்டம் இன்றி – without a tender outlook, பொருட்கு இவர்ந்து – leaving for wealth, நில்லாத உள்ளத்தவர் – the man without a heart to stay

31
தலைவி சொன்னது

பேழ்வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்துப்,
பாழூர்ப் பொதியில் புகாப் பார்க்கும், ஆரிடைச்,
சூழாப் பொருள் நசைக்கண் சென்றோர், அருள் நினைந்து
வாழ்தியோ மற்றோ உயிர்.

What the heroine said

My life!  Do you live thinking
about the graces of the man
who desired wealth and left
without thinking, for the
wasteland,
where a huge tiger with gaping
mouth awaits food in the
common ground of a ruined
town, after its prey elephant
escaped.

Notes:  பொருள்வயின் பிரிந்துபோய தலைவனைக் காய்ந்து தலைமகள் தானே கூறிக்கொண்டது.

பேழ்வாய் இரும் புலி – huge tiger with a gaping mouth, குஞ்சரம் கோள் பிழைத்து – elephant escaped killing, பாழூர்ப் பொதியில் – in the ruined town common grounds, புகாப் பார்க்கும் – for food, ஆர் இடை – in the wasteland, சூழா – without analyzing, பொருள் நசைக்கண் சென்றோர் – one who went desiring wealth, அருள் நினைந்து வாழ்தியோ மற்றோ உயிர் – oh my life!  do you live thinking about his graces

32
தலைவி தோழியிடம் சொன்னது

நீரில் அருஞ்சுரத்து ஆமான் இனம் வழங்கும்
ஆரிடை அத்தம் இறப்பர் கொல், ஆய் இழாய்,
நாணினை நீக்கி, உயிரோடு உடன் சென்று
காணப் புணர்ப்பது கொல் நெஞ்சு.

What the heroine said to her friend

Will he pass through the harsh
wasteland devoid of water,
where herds of wild cattle roam?

Oh friend with chosen jewels!
Will my heart unite with my life
to see him, losing its shyness?

Notes:  பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி உடன்படாது சொல்லியது.

நீர் இல் – without water, அரும்சுரத்து – in the harsh wasteland, ஆமான் இனம் வழங்கும் ஆர் இடை அத்தம் இறப்பர் கொல் – will he pass the harsh wasteland path where there are herds of wild cattle, ஆய் இழாய் – oh one with chosen jewels, oh one with beautiful jewels, நாணினை நீக்கி – removing shyness, உயிரோடு – with life, உடன் சென்று காண – to go together to see, புணர்ப்பது கொல் நெஞ்சு – will the heart unite

33
தலைவி தோழியிடம் சொன்னது

பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த,
நெறி தூர் அருஞ்சுரம், நாம் உன்னி அறிவு இட்டு
அலர் மொழி, சென்ற கொடியக நாட்ட
வலன் உயர்ந்து தோன்றும் மலை.

What the heroine said to her friend

Male birds with bright spots
prick striped hemp plants
and litter the harsh wasteland
path with droppings.

Knowing our worry, gossip
has risen high like the raised
flags on the lofty mountains.

Notes:  ஏதிலார் கூறும் அலர்கண்டு தலைவி ஆற்றாது தோழி கேட்ப உரைத்தது.

பொறி – spots, கிளர் – bright, சேவல் – male birds, வரி மரல் குத்த – they prick striped hemp plants, நெறி தூர் அருஞ்சுரம் – the path on the harsh wasteland has hemp droppings, நாம் உன்னி அறிவு இட்டு – knowing us worrying, அலர் மொழி – gossip, சென்ற – went, கொடியக நாட்ட வலன் உயர்ந்து தோன்றும் மலை – appears like flags raised with strength on tall mountains

34
தலைவி தோழியிடம் சொன்னது

பீர் இவர் கூரை மறு மனைச் சேர்ந்து அல்கிக்,
கூர் உகிர் எண்கின் இருங்கிளை கண் படுக்கும்,
நீர் இல் அருஞ் சுரம் உன்னி அறியார் கொல்,
ஈரம் இல் நெஞ்சின் அவர்?

What the heroine said to her friend

Does he not think and
understand the nature of the
harsh, waterless wasteland,
where large herds of bears
with sharp claws sleep on the
roofs of ruined houses on
which peerkai vines have
spread?

He has no pity in his heart!

Notes:  பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி உடன்படாது சொல்லியது.

பீர் இவர் கூரை – roof with sponge/ridge gourd vines spread, மறு மனைச் சேர்ந்து அல்கி – staying in the ruined houses, கூர் உகிர் – sharp claws, எண்கின் – of bears, இருங்கிளை – large herds, கண் படுக்கும் – they sleep, they close their eyes, நீர் இல் அருஞ்சுரம் – waterless harsh wasteland, உன்னி அறியார் கொல் – does he not think and understand, ஈரம் இல் நெஞ்சின் அவர் – he has no pity in his heart

35
தலைவி தோழியிடம் சொன்னது

சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை,
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும்,
தேரொடு கானம் தெருள் இலார் செல்வார் கொல்,
ஊர் இடு கவ்வை ஒழித்து?

What the heroine said to her friend

Will my lover with no clarity
of thought,
ignore the gossip that has
risen in town,
and climb on his chariot and
leave for the pirampu forest
that girdles groves,
where squirrels chirp and the
roosters in town fight with
quails?

Notes:  பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி உடன்படாது சொல்லியது.

சூரல் புறவின் – in the forest with cane/rattan, பிரம்பு, Calamus rotang, அணில் பிளிற்றும் – squirrels bark, squirrels chirp, சூழ் – surrounded, படப்பை – groves, ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும் – where the roosters in town fight with quails, தேரொடு கானம் தெருள் இலார் செல்வார் கொல் – will the man without clarity go to the forest on his chariot (தேரொடு – உருபு மயக்கம், கொல் – ஐய வினாப் பொருள்), ஊர் இடு கவ்வை ஒழித்து – ignoring gossip in town

36
தலைவி தோழியிடம் சொன்னது

முள் உடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை,
புள்ளி வெருகுதன் குட்டிக்கு இரை பார்க்கும்,
கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

What the heroine said to her friend

They say the path my lover
took with desire in the
wasteland has bandits,
and in the groves surrounded
by tangled bamboo with thorns,
wildcats with spots search for
food to feed their kittens.

Notes:  தலைமகன் பொருள்வயின் பிரிந்த காலத்து ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைமகள் கூறியது.

முள் உடை மூங்கில் – bamboo with thorns, பிணங்கிய – tangled, சூழ் படப்பை – surrounded by groves, புள்ளி வெருகு – wild cats with spots, தன் குட்டிக்கு இரை பார்க்கும் – look for food for their kittens, கள்ளர் வழங்கும் சுரம் – wasteland where there are robbers, என்பர் – they say, காதலர் உள்ளம் படர்ந்த நெறி – the path where my lover went with desire

37
தோழி தலைவனிடம் சொன்னது

பொரி புற ஓமைப் புகர் படு நீழல்,
வரி நுகல் யானை பிடியோடு உறங்கும்,
எரி மயங்கு கானம் செலவுரைப்ப, நில்லா
அரி மயங்கு உண் கண்ணுள் நீர்.

What the heroine’s friend said to the hero

If I tell her you are leaving
for the forest with raging
fire,

……….where a bull elephant with
……….lines on its forehead sleeps
……….with its female in the dappled
……….shade of a rough-trunked ōmai
……….tree,

her kohl-rimmed, lined, confused
eyes will shed endless tears.

Notes:  பிரிவு உணர்த்திய தலைவனுக்குத் தோழி உடன்படாது தலைவிக்குப் பின்னர் நேரும் இன்னல்களை எடுத்துக் கூறியது.

பொரி புற ஓமை – ōmai tree with rough trunks, dillenia indica, புகர் படு நீழல் – dappled shade (நீழல் – நீட்டல் விகாரம்), வரி – lines, நுகல் – forehead, யானை – elephant, பிடியோடு உறங்கும் – sleeps with his female, எரி மயங்கு கானம் செலவுரைப்ப – if I tell her that you are leaving for the forest with burning fire, நில்லா – will not stop (ஈறுகெட்ட எதிர்மறை ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று), அரி – lines, மயங்கு – mixed, உண் கண்ணுள் நீர் –her kohl-lined eyes will shed tears

38
தலைவி தோழியிடம் சொன்னது

கோள் வல் கொடு வரி நல் வயமாக் குழுமும்,
தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார் கொல்,
ஆள் வினையின் ஆற்ற அகன்றவா நன்று உணரா,
மீளி கொள் மொய்ம்பினவர்.

What the heroine said to her friend

Not understanding well the
benefits of staying here,
did my brave, strong man go
to the forest,

……….with thick-stemmed
………bushes with flowers,
………and prowling
………groups of tigers with
………curved stripes that
………are capable of killing,

goaded by his desire to earn
wealth?

Notes:  பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி உடன்படாது சொல்லியது.

கோள் வல் – capable of killing, கொடு வரி – tigers with curved stripes, நல் வயமா – fine mighty animals, குழுமும் – roam, தாள் – stems, வீ பதுக்கைய – with bushes with flowers (பதுக்கை could also mean a pile of stones, pile of leaves or a shallow grave), கானம் இறந்தார் கொல் – did he go to the forest, ஆள் வினையின் ஆற்ற அகன்றவா – went to achieve his business goals, நன்று உணரா – not understanding the benefits of staying here (உணரா – ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்), மீளி கொள் மொய்ம்பினவர் – he is a brave and strong man

39
தலைவி தோழியிடம் சொன்னது

கொடுவரி பாயத் துணை இழந்து, அஞ்சி,
கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டு,
நெடுவரை அத்தம் இறப்பர் கொல், கோண்மாப்
படுபகை பார்க்கும் சுரம்?

What the heroine said to her friend

Will he go to the wasteland
with tall mountains,
where a bull elephant lost its
mate to an attacking tiger with
curved stripes, fears, and waits
on a path between boulders
with dry kadukkāy trees, looking
out for that killer enemy?

Notes:  பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி உடன்படாது சொல்லியது.

கொடுவரி பாயத் துணை இழந்து – losing its partner to a tiger that attacked, அஞ்சி – fearing, கடுவுணங்கு பாறைக் கடவு – between boulders path with dry myrobalan trees, தெவுட்டு – waiting, நெடுவரை அத்தம் இறப்பர் கொல் – will he go to the wasteland with tall mountains (கொல் – ஐயப்பொருள் கொண்டது), கோள் மாப் படுபகை பார்க்கும் – waits for its killer enemy (the tiger that killed its mate), சுரம் – wasteland

40
தோழி தலைவியிடம் சொன்னது

மன்ற முது மரத்து ஆந்தை குரல் இயம்பக்,
குன்றகம் நண்ணிக் குறும்பு இறந்து சென்றவர்,
உள்ளிய தன்மையர் போலும், அடுத்தடுத்து
ஒள்ளிய தும்மல் வரும்.

What the heroine’s friend said to her

It appears that your lover
who went past towns near
the mountains,
is thinking about returning.

An owl on an old tree in
the town’s common ground
hoots, and our perfect sneezes
have come, one after another.

These are good omens.

Notes:  தோழி நிமித்தம் காட்டிக் கூறியது.

மன்ற முது மரத்து – old tree in the common grounds, ஆந்தை குரல் இயம்ப – an owl hoots, குன்றகம் நண்ணி – went on the mountains, குறும்பு இறந்து சென்றவர் – the man who went past towns, உள்ளிய தன்மையர் போலும் – it appears like he is of the nature to think about returning, அடுத்து அடுத்து – one after another (அடுக்குத் தொடர் : மிகுதிப்பொருள் பற்றியது), ஒள்ளிய – perfectly, beautifully, தும்மல் வரும் – sneezing comes

41
தோழி தலைவியிடம் சொன்னது

பூங்கண் இடம் ஆடும், கனவும் திருந்தின,
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப,
வீங்கிய மென்தோள் கவினிப், பிணி தீரப்,
பாங்கத்துப் பல்லி படும்.

What the heroine’s friend said to her

Our flower-like eyes twitch.
Our dreams are perfect.

For your distress, caused
by thinking about your lover
who went to the tall mountains,
to end,
a lizard that is nearby clucks,
which will make your delicate,
rounded arms to become
beautiful.

Notes:  தோழி நிமித்தம் காட்டிக் கூறியது.

பூங்கண் இடம் ஆடும் – our flower-like eyes twitch, கனவும் திருந்தின – dreams are perfect, ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப – when we think about the man who went to the tall mountains, வீங்கிய மென்தோள் – rounded delicate arms, கவினி – to become beautiful, பிணி தீர – for your distress to end, பாங்கத்துப் பல்லி படும் – a lizard that is nearby clucks (பாங்கத்து – அத்து சாரியை)

42
தலைவியின் தாய் சொன்னது

ஒல்லோம் என்று ஏங்கி உயங்கி இருப்பாளோ,
கல் இவர் அத்தம் அரி பெய் சிலம்பு ஒலிப்பக்,
கொல் களிறு அன்னான் பின் செல்லுங்கொல் என் பேதை,
மெல் விரல் சேப்ப நடந்து.

What the heroine’s mother said

Will she be sad, thinking
she might be unable to
proceed?

Will she walk behind her
strong young man who is
like a murderous elephant,
on the rocky wasteland
path, her anklets jingling,
my naïve young daughter
walking with her toes
reddening?

Notes:  மகட்போக்கிய நற்றாய் கவன்று உரைத்தது.

ஒல்லோம் என்று – thinking she might be unable, ஏங்கி உயங்கி இருப்பாளோ – will she be distressed, கல் இவர் அத்தம் – wasteland with stones spread, அரி பெய் சிலம்பு ஒலிப்ப – her rhythmic anklets jingling, கொல் களிறு அன்னான் பின் செல்லுங் கொல் – did she go behind the man like a murderous elephant, என் பேதை – my naïve young woman, மெல்விரல் சேப்ப நடந்து – walking with her toes becoming red

 

மருதம் – Marutham

வயலும் வயல் சார்ந்த இடமும் – Field and Field Environment
ஊடலும் ஊடல் நிமித்தமும் – Infidelity and Resentment

43
தோழி தலைவியிடம் சொன்னது

ஆற்றல் உடையன், அரும் பொறி நல்லூரன்,
மேற்றுச் சிறுதாய காய் வஞ்சி போற்றுருவிக்,
கட்டக முத்திற் புதல்வனை மார்பின் மேல்
பட்டஞ் சிதைப்ப வரும்.

What the heroine’s friend said to her

The capable man from the fine town
with precious wealth held to his
chest his son, who ruined the garment
on his chest, who is like a vanji vine
with small fruits and like a seed that
scatters when a node breaks.

Notes:  தலைவன் தன் மகனைக் கண்டு மகிழ்ந்ததைத் தோழி கண்டு மகிழ்ந்து உரைத்தது.

ஆற்றல் உடையன் – man with ability, அரும் பொறி – precious wealth, நல்லூரன் – the man from the fine town, மேற்று – above, சிறுதாய காய் வஞ்சி – vanji vine with small unripe fruits, calamus rotang, போற்றுருவி – similar in structure, கண் தக – node breaking, முத்திற் புதல்வனை – son who is like a seed, மார்பின் மேல் பட்டஞ் சிதைப்ப வரும் – holding him on his chest as his upper body clothes get ruined

44
தலைவி சொன்னது

அகன் பணையூரனைத் தாமம் பிணித்தது,
இகன்மை கருதி யிருப்ப, முகன் அமரா
ஏதின் மகளிரை நோவதெவன் கொலோ,
பேதமை கண்டொழுகு வார்?

What the heroine said

Why should I hate those
other women whose faces
I have not seen,

……….who bound the man
……….from the vast farm town
……….with their garlands,

when he is the one who
behaves in a stupid way?

Notes:  பரத்தையிற் பிரிந்த தலைவனைத் தலைமகள் காய்ந்து உரைத்தது.

அகன் பணை ஊரனை – the man from a vast agricultural town, தாமம் பிணித்தது – bound with their garlands, இகன்மை கருதி யிருப்ப – consider hatred, முகன் அமரா – unseen faces, ஏதின் மகளிரை நோவதெவன் கொலோ – why should I be angry with those other women (கொல், ஓ – அசை நிலைகள்), பேதமை கண்டு ஒழுகுவார் – one who behaves in a stupid manner

45
தலைவி பாணனிடம் சொன்னது

போத்தில் கழுத்தில் புதல்வன் உணச்சான்றான்
மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள்
நீத்து நீர் ஊனவாய்ப் பாண நீ போய் மொழி
கூத்தாடி உண்ணினும் உண்

What the heroine said to the bard

He used to embrace my
neck perfectly.  Now I am
feeding our son. I have
become older now.

Oh bard!  You go to the street
of women with growing
breasts and tell him about me.
Drink liquor and eat meat.
Sing and dance with them.

Notes:  பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.

போத்து இல் – without fault, கழுத்தில் – he embraced my neck, புதல்வன் உணச்சான்றான் – our son is drinking my milk, மூத்தேம் இனியாம் – I have become older now, வருமுலையார் சேரியுள் நீத்து – go to the street of the women with growing breasts, நீர் ஊனவாய் – drink liquor and eat meat, பாண நீ போய் மொழி – you go and tell oh bard, கூத்தாடி உண்ணினும் உண் – go and dance and eat

46
தலைவி பாணனிடம் சொன்னது

உழலை முருக்கிய செந்நோக்கு எருமை,
பழனம் படிந்து செய் மாந்தி நிழல் வதியும்,
தண் துறை ஊரன், மலரன்ன மால் புறப்
பெண்டிர்க்கு உரை, பாண, உய்த்து.

What the heroine said to the bard

Oh bard!  Go and tell those
confused women that
the love of the man from
the cool shores,

……….where a red-eyed
……….buffalo ruins the pole to
……….which he is tied and goes
……….to a field, eats and lies
……….in the shade,

is like a flower.  It will fade.

Notes:  பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.

உழலை – wooden pole, முருக்கிய – ruined, செந்நோக்கு எருமை – buffalo with red eyes, பழனம் படிந்து செய் மாந்தி – goes to the field and eats, நிழல் வதியும் – rests in the shade, தண் துறை ஊரன் – man from the town with cool shores, மலரன்ன – he is like a flower, his love is like a flower, மால் புறப் பெண்டிர்க்கு உரை பாண – tell the confused women oh bard, உய்த்து – go

47
செவிலி தலைவியின் தாயிடம் சொன்னது

தேன் கமழ் பொய்கை அக வயல் ஊரனைப்
பூங்கண் புதல்வன் மிதித்துழக்க, ஈங்குத்
தளர் முலை பாராட்டி, என்னுடைய பாவை
வளர் முலைக் கண் ஞமுக்குவார்.

What the foster mother said to the heroine’s mother

As his son with flower-like
eyes is kicking him,
the man from the town
with fields and ponds with
flower nectar fragrances,
praises her sagging breasts
and rubs gently on the tips
of the growing breasts of our
doll-like daughter.

Notes:  தலைவியின் இல்லற இயல்பினைக் கண்டு மகிழ்ந்த செவிலி நற்றாய்க்கு உரைத்தது.

தேன் கமழ் பொய்கை – ponds with nectar fragrance, அக வயல் ஊரனை – the man from the town with fields, பூங்கண் புதல்வன் மிதித்து உழக்க – as the son with flower-like eyes is kicking him, ஈங்குத் தளர் முலை பாராட்டி – praising her sagged breasts here, என்னுடைய பாவை – my doll-like daughter, my statue-like daughter, வளர் முலைக் கண் ஞமுக்குவார் – presses the nipples on her breast

48
தலைவி பாணனிடம் சொன்னது

பேதை புகலை புதல்வன் துணைச் சான்றோன்
ஓதை மலி மகிழ்நற்கு, யாஅம் எவன் செய்தும்,
பூவார் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள்
ஓவாது செல், பாண நீ,

What the heroine said to the bard

I, a naïve woman, am protected
by my wise son who is a partner
to me when the lord of the land
with constant farming sounds,
is away.

Go without fail to the street with
gold-like women with wavy hair
decorated with flowers, to see him
oh bard!

Notes:  பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.

பேதை – naïve woman, புகலை – protection (ஐ – சாரியை), புதல்வன் – son, துணைச் சான்றோன் – wise partner, ஓதை மலி மகிழ்நற்கு – lord of the land with abundant noises, யாஅம் எவன் செய்தும் – of what use am I to him (யாஅம் – இசைநிறை அளபெடை), பூவார் குழல் கூந்தல் – wavy hair with flowers, பொன் அன்னார் சேரியுள் – to the streets of those who are like gold, ஓவாது செல் பாண நீ – you go there without fail oh bard

49
தலைவி பாணனிடம் சொன்னது

யாணர் நல்லூரன் திறங் கிளப்பல், என்னுடை,
பாண, இருக்க, அது களை, நாணுடையான்
தன்னுற்ற எல்லாம் இருக்க, இரும் பாண
நின் உற்றது உண்டேல் உரை.

What the heroine said to the bard

Oh bard!  Do not sing the praises
of the man from the prosperous
town.  Abandon that.

Stay here for a while with me.
He used to be shy.  Other than his
mistakes, bard, tell me if you have
any problems.

Notes:  பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.

யாணர் நல்லூரன் – the man from the prosperous fine town, திறங் கிளப்பல் – do not sing his praises, என்னுடை – my, பாண – oh bard, இருக்க – stay, அது களை – abandon it, நாணுடையான் – he used to be shy, தன்னுற்ற எல்லாம் இருக்க – apart from the mistakes he has made, இரும் பாண – oh great bard, நின் உற்றது உண்டேல் உரை – if you have any problems let me know

50
தலைவி தோழியிடம் சொன்னது

ஒள் இதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை,
உள்ளம் கொண்டு உள்ளான் என்று யார்க்கு உரைக்கோ? ஒள் இழாய்,
அச்சுப் பணி மொழி உண்டேனோ? மேனாள் ஓர்
பொய்ச்சூள் என அறியாதேன்.

What the heroine said to her friend

To whom can I tell
that he does not think
about me, the man from
the town with lotus
blossoms with bright
petals?

Oh friend with lustrous
jewels! Did I keep his
humble words in writing?
No! I did not know then
that his promises would
become lies.

Notes:  தலைவன் பரத்தையிற் பிரியத் தலைமகள் புலந்து உரைத்தது.

ஒள் இதழ்த் தாமரைப் போது உறழும் ஊரனை – the man from the town with bright-petaled lotus blossoms, உள்ளம் கொண்டு உள்ளான் என்று – that he does not think about me, யார்க்கு உரைக்கோ – who will I tell (உரைக்கு – தன்மை யொருமை வினைமுற்று, ஓ – இரக்கபொருள் கருதியது), ஒள் இழாய் – oh one with bright jewels, அச்சு – writing, பணி மொழி – humble words, உண்டேனோ – am I keeping it (ஓ எதிர்மறைப் பொருளது), மேனாள் – in the past, ஓர் பொய்ச்சூள் என அறியாதேன் – I did not understand then that his promises would be lies

51
தலைவி தோழியிடம் சொன்னது

பேதையர் என்று தமரைச் செறுபவோர்,
போது உறழ் தாமரைக் கண் ஊரனை நேர் நோக்கி,
வாய் மூடியிட்டும் இருப்ப, ஏர் மாண் இழாய்,
நோவதென் மார்பு அறியும் இன்று.

What the heroine said to her friend

The women who attack
him as being stupid,
the man from the town
with lotus blossoms,
shut their mouths,
when they see him in
person.

Oh friend with pretty,
splendid jewels! Only
my heart knows my pain!

Notes:  தலைவன் பரத்தையிற் பிரியத் தலைமகள் புலந்து உரைத்தது.

பேதையர் என்று தமரைச் செறுபவோர் – those who attack him as stupid (செறுப – பலர்பால் படர்க்கை வினைமுற்று), போது உறழ் தாமரைக் கண் ஊரனை – the man from the town with lotus flowers, நேர் நோக்கி வாய் மூடியிட்டும் இருப்ப – when they see him in person they shut their mouths (இருப்ப – பலர்பால் படர்க்கை வினைமுற்று), ஏர் மாண் இழாய் – oh my friend with pretty splendid jewels (மாண் இழாய் – பண்புத் தொகை அன்மொழித்தொகை), நோவதென் மார்பு அறியும் இன்று – only my heart knows my pain

52
தலைவி பரத்தையரிடம் சொன்னது

காதலில் தீரக் கழிய முயங்கல்மின்,
ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனைப்
பேதைப்பட்டு ஏங்கல்மின், நீயிரும் எண்ணிலா
ஆசை ஒழிய உரைத்து.

What the heroine said to the concubines

Do not embrace him
to satisfy your love,
the man from the town
surrounded by loud
flood waters!

Do not pine for him in
naivete, you who are
uttering words, your
endless desires ruined.

காதலில் தீரக் கழிய முயங்கல்மின் – do not embrace him to satisfy your love (முயங்கன்மின் – எதிர்மறை ஏவற் பன்மை வினைமுற்று), ஓதம் துவன்றும் – flooding nearby, ஒலி புனல் ஊரனை – man from the town with loud waters, பேதைப்பட்டு ஏங்கல்மின் – do not pine in sorrow being naïve (ஏங்கன்மின் – எதிர்மறை ஏவற் பன்மை வினைமுற்று), நீயிரும் – all of you, எண்ணிலா ஆசை ஒழிய – when your countless desires are ruined, உரைத்து – uttering

53
தோழி தலைவியிடம் சொன்னது

உள் நாட்டம் சான்றவர் தந்த நசையிற்று என்று
எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும் என்று எண்ணி,
வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன்,
பழி பாடு நின் மேலது.

What the heroine’s friend said to her

The man from the
town with fertile fields
has returned,
ending his affairs with
those who do not think
about the loving way
of life prescribed by the
wise who have pondered
about it.

If you do not accept him
who praises you,
the blame will be on you.

Notes:  தலைவியின் ஊடல் தீர விரும்பியவளாய் நின்று தலைவியைக் கழறியது.

உள் நாட்டம் சான்றவர் தந்த – given by the wise people who have analyzed in their minds (ethical way of life), நசையிற்று என்று – that it is love, எண்ணார்க்கு – those who do not think, கண்ணோட்டம் – outlook, தீர்க்குதும் என்று எண்ணி – thinking about ending it, வழிபாடு கொள்ளும் – adores you, வள வயல் ஊரன் – the man from the town with fertile fields, பழி பாடு நின் மேலது – the blame will be on you

54
தோழி தலைவனிடம் சொன்னது

உண்துறைப் பொய்கை வராஅல் இனம் இரியும்
தண்துறையூர, தகுவதோ, ஒண் தொடியைப்
பாராய், மனை துறந்து அச்சேரிச் செல்வதனை
ஊராண்மை யாக்கிக் கொளல்.

What the heroine’s friend said to the hero

Oh man from the town with
cool shores, where varāl fish
swim in ponds with drinking
water shores!

Look at this woman wearing
gleaming bangles!

Does it suit you to abandon
your wife and go to the streets
of other women, making it a
big matter?

Notes:  பரத்தைபால் சென்று வந்த தலைவனைத் தோழி பணிவான மொழியால் இணங்குவித்தது.

உண் துறைப் பொய்கை – in the pond with drinking water shores, வராஅல் இனம் இரியும் – schools of varāl fish swim about (வராஅல் – இசைநிறை அளபெடை), தண் துறை ஊர – oh man from the town with cool shores, தகுவதோ – is it fitting your stature, ஒண்தொடியைப் பாராய் – look at the woman with bright bangles (ஒண்தொடி- பண்புத்தொகை அன்மொழி, பாராய் – முற்றெச்சம்), மனை துறந்து – abandoning your home, அச்சேரிச் செல்வதனை – going to those streets, ஊராண்மையாக்கிக் கொளல் – making it a big matter

55
தலைவி பாணனிடம் சொன்னது

பொய்கை நல் ஊரன் திறங்கிளத்தல், என்னுடைய
எவ்வம் எனினும், எழுந்தீக, வைகல்
மறு வில் பொலந்தொடி வீசும் அலற்றும்
சிறுவன் உடையேன் துணை.

What the heroine said to the bard

You singing the praises
of the man from the fine
town with ponds is
painful for me.

Get up and leave!
I have with me my little
son playing on the streets,
talking endlessly,
and swaying his arms with
gold bangles.

Notes:  பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.

பொய்கை நல் ஊரன் – the man from the fine town with ponds, திறங்கிளத்தல் – singing his praises, என்னுடைய – mine, எவ்வம் எனினும் – even though it is painful, எழுந்தீக – you rise up (வியங்கோள் வினைமுற்று), வைகல் மறுவில் – daily on the street, பொலந்தொடி வீசும் – sways his gold bangles, அலற்றும் சிறுவன் – young son talking endlessly, உடையேன் துணை – I have my little son who plays swaying his arms with gold bangles

56
தோழி தலைவியிடம் சொன்னது

வள வயல் ஊரன் மருளுரைக்கும் மாதர்
வளைஇய சக்கரத்து ஆழி கொளை பிழையா
வென்றிடை யிட்டு வருமேல், நின் வாழ் நாட்கள்
ஒன்றி அனைத்தும் உளேன்.

What the heroine’s friend said to her

If the man from the
town from fertile fields
ever escapes the hold
of those women,

……….who utter
……….attractive words
……….and embrace him
……….wearing wheel-like,
……….round rings,

I will unite you with him
for all your living days!

Notes:  பரத்தையிற் பிரிந்த தலைவனின் வரவை விரும்பிய தோழி தலைவியிடம் கூறியது.

வள வயல் ஊரன் – the man from the town with fertile fields, மருள் உரைக்கும் – utters attractive words, மாதர் – women, வளைஇய சக்கரத்து – rounded like wheels, ஆழி – finger rings, கொளை பிழையா வென்றிடையிட்டு வருமேல் – if he escapes their holding him tight, நின் வாழ் நாட்கள் ஒன்றி அனைத்தும் உளேன் – I will unite you with him for all your living days

 

நெய்தல் – Neythal

கடலும் கடல் சார்ந்த இடமும் – Ocean and Seashore
இரங்கலும் இரங்கல் நிமித்தமும் – Anxious Waiting

57
தலைவி தோழியிடம் சொன்னது

ஒழுகு நிரைக் கரை, வான் குருகின் தூவி
உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப்,
பேதையான் என்றுணரும் நெஞ்சும், இனிது உண்மை
ஊதியம் அன்றோ உயிர்க்கு?

What the heroine said to her friend

For my heart to feel that
he is naïve,

……….the man from the
……….shores with moving
……….waves, where the
……….flapping wings of
……….white herons cause
……….strong breeze,

is it not sweet benefit to my
life?

Notes:  தலைவனைப் பழித்த தோழியிடம் தலைவி சொன்னது.

ஒழுகு நிரைக் கரை – shore with moving waves, வான் குருகின் தூவி – white heron’s feathers, உழிதரும் – swirls, ஊதை எடுக்கும் – causes strong breeze, துறைவனை – the man from the shores, பேதையான் என்று உணரும் நெஞ்சும் – heart that feels that he is naïve, இனிது உண்மை ஊதியம் அன்றோ உயிர்க்கு – is it not sweet benefit to my life

58
தலைவி தோழியிடம் சொன்னது

என்னை கொல் தோழி, அவர் கண்ணும் நன்கில்லை,
அன்னை முகனும் அதுவாகும், பொன் அலர்
புன்னையம் பூங்கானல் சேர்ப்பனைத் தக்கதோ,
நின்னல்லது இல்லென்று உரை?

What the heroine said to her friend

What is the reason oh
friend?  His attitude is not
good, and mother’s face
reflects the same.

Is this fitting for the lord
of the seashore grove with
golden punnai flowers?

Go and tell him I don’t
have anybody but him.

Notes:  வரையாது ஒழுகும் தலைமகனிடம் தன் நிலையைக் கூறு எனத் தோழிக்குச் சொல்லியது.

என்னை கொல் தோழி – what is the reason oh my friend (கொல் – ஐயப் பொருள் தரும் இடைச்சொல்), அவர் கண்ணும் நன்கில்லை – his attitude is not good, அன்னை முகனும் அதுவாகும் – mother’s face reflects the same, பொன் அலர் புன்னையம் பூங்கானல் சேர்ப்பனை – the lord of the seashore grove with golden punnai flowers (சேர்ப்பனை – சேர்ப்பனுக்கு, உருபுமயக்கம்), தக்கதோ – is it fitting (ஓ எதிர்மறைப்பொருள்), நின்னல்லது இல்லென்று உரை – tell him that I don’t have anybody other than him

59
தோழி தலைவனிடம் சொன்னது

இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன்
கடு மான் மணி அரவம் என்று, கொடுங்குழை
புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தாள், சிறுகுடியர்
உள்ளரவம் நாணுவர் என்று.

What the heroine’s friend said to the hero

On hearing the chirps of birds,
the young woman wearing
curved earrings moved away,

thinking people in the small
village would be embarrassed
that they were sounds of the
bells on the horses of the lord
of the shores with wide groves
and sand dunes heaped by waves.

Notes:  அல்லகுறி பட்டமையைக் கூறி வரைவு கடாயது.

இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன் – the lord of the shores with sand brought by waves and wide groves (இடுமணல் – வினைத்தொகை), கடு மான் மணி அரவம் என்று – thinking that it is the sounds of the bells of the fast horses, கொடுங்குழை – one with curved earrings (கொடுங்குழை – பண்புத்தொகை அன்மொழி), புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தாள் – she heard the birds chirping and moved away, சிறுகுடியர் உள்ளரவம் நாணுவர் என்று – thinking that the fishermen in the small community would be embarrassed

60
தலைவி தோழியிடம் சொன்னது

மணி நிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்,
அணி நலம் உண்டு அகன்றான் என்று கொல், எம் போல்
திணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயரத்
துணி முந்நீர் துஞ்சாதது?

What the heroine said to her friend

Is it because the lord of the
shores with huge brackish
ponds with sapphire-colored
blue waterlilies, enjoyed my
beauty and abandoned me,

that the bright ocean does not
sleep like me, breaking its
waves on the dense sand dunes
on its shores?

Notes:  தலைவன் இரவுக்குறியின்கண் தன்னைச் சார்ந்து பிரிந்தபின், உறங்காமல் புலம்பித் தோழியிடம் உரைத்தது.

மணி நிற நெய்தல் – sapphire colored blue waterlilies, இருங்கழி – huge backwaters, dark backwaters, சேர்ப்பன் – the lord of the shores, அணி நலம் உண்டு அகன்றான் என்று கொல் – is it because he enjoyed my beauty and left, எம் போல் – like me, திணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயர – waves break on the dense sand dunes, துணி முந்நீர் துஞ்சாதது – bright ocean that doesn’t sleep

61
தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது

கண் திரள் முத்தம் பயக்கும், இரு முந்நீர்ப்
பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை,
முண்டகக் கானலுள் கண்டேன் எனத்தெளிந்தேன்,
நின்ற உணர்விலாதேன்.

What the heroine said to her heart

I understood when I saw
the lord of the shores in the
grove with mundakam
plants,

………where the huge ocean
………yields pearls as large as
………eyeballs, and ships come
………there to take goods,

but stood there with no feelings.

Notes:  துன்பத்தால் இன்ப உணர்ச்சி இல்லாதவளானேன் என்று தன் நெஞ்சிடம் கூறியது.

கண் திரள் முத்தம் பயக்கும் இரு முந்நீர் – huge ocean that yields pearls thick big eye balls, பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை – the lord of the shores where ships come to take goods, முண்டகக் கானலுள் கண்டேன் எனத்தெளிந்தேன் – I understood when I saw him in the grove with mundakam plants, நீர் முள்ளி, thorn bush, நின்ற உணர்விலாதேன் – I stood there with no feeling

62
தோழி செவிலியிடம் சொன்னது

அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும்
கொடும் கழிச் சேர்ப்பன் அருளான் எனத் தெளிந்து,
கள்ள மனத்தான் அயல் நெறிச் செல்லும் கொல்
நல் வளை சோர நடந்து.

What the heroine’s friend said to the foster mother

Will he be dishonest and
choose some other woman,

……….the lord of the shores
……….with curved backwaters,
……….and adumpu vines
……….spread on sand on which
……….crabs scuttle,

letting our young woman with
pretty bangles to become sad,
who thinks he will not be
gracious to her?

No!  He will come and marry her!

Notes:  தலைவன் வேறு ஒரு பெண்ணை மணம் புரிவானோ என ஐயுற்ற செவிலியின் குறிப்பறிந்து தோழி அவளிடம் கூறியது.

அடும்பு இவர் எக்கர் – sand on which adumpu vines have spread, Ipomoea pes caprae, அலவன் வழங்கும் – crabs move around, கொடும் கழிச் சேர்ப்பன் – lord of the shores with curved backwaters, அருளான் எனத் தெளிந்து – knowing that he is not a gracious man (தெளிந்து – காரணப்பொருளில் வந்த வினையெச்சம்), கள்ள மனத்தான் – one with a cheating/dishonest mind (மனத்தான் – முற்றெச்சம்), அயல் நெறிச் செல்லும் கொல் – will he choose another path, will he choose some other woman – no he will not do that (கொல் – ஐயவினாப் பொருளோடு எதிர்மறைக்கண்ணது), நல் வளை சோர நடந்து – for our girl with pretty bangles to become sad

63
தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்கும்படியாக

கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித்
தண்ணந் துறைவனோ, தன் இலன், ஆய் இழாய்,
வண்கைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப்,
பண்ணமைத் தேர் மேல் வரும்.

What the heroine’s friend said to her, as the hero listened nearby

My friend wearing chosen
jewels!

The lord of the cool shores
with curved backwaters
bearing blue waterlily
blossoms that resemble eyes,
is not himself.

Since he has got you with his
generous hands, he comes
riding on his well-made
chariot, thinking he is manly.

Notes:  தோழி தலைவனை வரைவு கடாயது.

கண்ணுறு நெய்தல் கமழும் – eyes-like blue waterlilies are fragrant, கொடுங்கழித் தண்ணந் துறைவனோ தன் இலன் – the lord of the curved backwaters and cool shores is not himself (ஒ – சிறப்புப் பொருள்), ஆய் இழாய் – one with chosen/pretty jewels (ஆயிழை – வினைத்தொகை அன்மொழி), வண் கை – charitable hands, பட்டதனை – got caught, ஆண்மை எனக்கருதிப் பண்ணமைத் தேர் மேல் வரும் – he comes riding his well-made chariot thinking it is manliness

64
தோழி அன்றிலிடம் சொன்னது

தெண்ணீர் இருங்கழி வேண்டும் இரை மாந்திப்,
பெண்ணை மேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்,
தண்ணந் துறைவற்கு உரையாய், மடமொழி
வண்ணம் தா என்று தொடுத்து.

What the heroine’s friend said to an ibis

Oh ibis with a curved beak,
who unites with your mate,
eating all the food you desire
from the vast brackish ponds
with clear water, and rests
on palmyra trees!

Tell the lord of the cool shores
to return the beauty of the young
woman who utters delicate words.

Notes:  வரைவிடை பொருட்பிரிவில் தலைவன் நீட்டித்தவழித் தோழி அன்றிலிடம் கூறியது.

தெண்ணீர் – clear waters, இருங்கழி – vast backwaters, வேண்டும் இரை மாந்தி – eating all the food they want, பெண்ணை மேல் சேக்கும் – rests in on the palmyra trees, வணர் வாய்ப் புணர் அன்றில் – oh ibis with a curved beak that unites with its mate, தண்ணந் துறைவற்கு உரையாய் – tell the man of the cool shores, மடமொழி வண்ணம் தா என்று தொடுத்து – request to return the beauty of the girl with delicate words

65
தலைவி குருகிடம் சொன்னது

எறி சுறாக் குப்பை இனங்கலக்கத் தாக்கும்
எறி திரைச் சேர்ப்பன் கொடுமை அறியா கொல்
கானகம் நண்ணி அருள் அற்றிடக்கண்டும்
கானலுள் வாழும் குருகு.

What the heroine said to a heron

Oh heron who lives in a grove!

Do you not know the cruelty
of the lord of the shores,

……….where leaping waves attack
……….jumping sharks, tossing and
……….mixing up the school,

even after you have seen him go
to the forest without graces?

Notes:  வரைவிடை பொருட்பிரிவில் தலைவன் நீட்டித்தவழித் தலைவி குருகிடம் கூறியது.

எறி சுறா – leaping sharks or attacking sharks, குப்பை இனங்கலக்க – heaps/groups of them are tossed around and mixed, தாக்கும் – attacking, எறி திரைச் சேர்ப்பன் – the lord of the shores with leaping/attacking waves, கொடுமை அறியா கொல் – do you not understand his cruelty, கானகம் நண்ணி – went to the forests, அருள் அற்றிடக் கண்டும் – even after seeing graces go away, கானலுள் வாழும் குருகு – oh heron that lives in a grove

66
தோழி தலைவியிடம் சொன்னது

நுண் ஞான் வலையில் பரதவர் போத்தந்த
பன் மீன் உணங்கல் கவரும் துறைவனைக்,
கண்ணினாற் காண அமையுங் கொல், என் தோழி
வண்ணம் தா என்கம் தொடுத்து?

What the heroine’s friend said to her

Will we be able to see
the lord of the shores,
where birds steal many
fish, brought by fishermen
with fine nets, left to dry?

My friend! Let us tell him
to return your beauty.

Notes:  வரைவிடை பொருட்பிரிவில் தலைவன் நீட்டித்தவழித் தோழி தலைவியிடம் கூறியது.

நுண் ஞான் வலையில் – with fine nets, பரதவர் போத்தந்த – brought by the fishermen, பன் மீன் உணங்கல் கவரும் – (birds) seize the many fish, துறைவனைக் – the lord of the shores, கண்ணினாற் காண அமையுங் கொல் – will we be able to see him (கொல் – ஐயவினாப்பொருள்), என் தோழி – my friend, வண்ணம் தா – return your beauty/virtue, என்கம் தொடுத்து – let us tell him

67
தோழி தலைவனிடம் சொன்னது

இவர் திரை நீக்கியிட்டு எக்கர் மணன் மேல்
கவர் கால் அலவன் தன பெடையோடு
நிகரில் இருங்கழிச் சேர்ப்ப, என் தோழி
படர் பசலை ஆயின்று தோள்.

What the heroine’s friend said to the hero

Oh lord of the shores with
vast backwaters of no equal,
where a crab with bent legs
scuttles around with his
female on the sand brought
by the moving waves!

My friend’s sorrow has caused
pallor to spread on her arms.

Notes:  தோழி தலைவனை வரைவு கடாயது.

இவர் திரை நீக்கியிட்டு – brought by the moving waves, எக்கர் மணன் மேல் – on the sand, கவர் கால் அலவன் தன பெடையோடு – crab with bent legs with its female, நிகரில் இருங்கழிச் சேர்ப்ப – oh lord of the shores with vast backwaters with no equal, என் தோழி படர் பசலை ஆயின்று தோள் – my friend’s sorrow has caused pallor on her arms/shoulders

68
தலைவி சொன்னது

சிறு மீன் கவுள் கொண்ட செந்தூவி நாராய்
இறு மென் குரல நின் பிள்ளைகட்கேயாகி
நெறி நீர் இருங்கழிச் சேர்ப்பன் அகன்ற
நெறியறிதி மீன்தபு நீ

What the heroine said

Oh stork with red feathers
who has small fish in your
beak, who kills fish for
your chicks with plaintive,
delicate chirps!

You know the manner
in which the lord of the
shores with vast, flowing
backwaters left me.

Notes:  வரைவிடை பொருட்பிரிவில் தலைவன் நீட்டித்தவழித் தலைவி வருந்திக் கூறியது.

சிறு மீன் கவுள் கொண்ட – having small fish in your beak, செந்தூவி நாராய் – oh stork with red feathers, இறு மென் குரல நின் பிள்ளைகட்கேயாகி – for your chicks with sad delicate chirps, நெறி நீர் – flowing water, இருங்கழிச் சேர்ப்பன் – the lord of the vast/dark backwaters, அகன்ற நெறி அறிதி – you know the manner in which he left, மீன்தபு நீ – you who kills fish

69, 70 இரண்டு பாடல்களும் மறைந்தன – Poems 69 and 70 have been lost.

ஐந்திணை எழுபது முற்றிற்று